Ezhuna book 10

From Ezhuna Media Foundation
Jump to: navigation, search
தமிழ்ப் பாஷை
Ezhunabook10.jpg
எழுநா எண் 10
ஆசிரியர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை
வகை -
பதிப்பு 2013
பக்கங்கள்
ISBN

தமிழ்ப் பாஷை

தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம் போன்ற விடயங்களின் அடிப்படையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான விடயங்களை 1892இல் முதன் முதலில் பேச முற்பட்டது.

தி.த.சரவணமுத்துப்பிள்ளை

1865ம் ஆண்டு ஈழத்தின் திருகோணமலையில் தி.த சரவணமுத்துப்பிள்ளை பிறந்தார். தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். “மோகனாங்கி” என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர். 1902 இல் தனது 37வது வயதில் இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

உள்ளடக்கம்

  1. தமிழ்ப் பாக்ஷை
  2. அறுசீர்கழி நெடிலாசிரிய விருத்தம்
  3. கோணை முத்துக்குமாரசுவாமி ஊஞ்சல்
  4. தத்தைவிடு தூது
  5. வாகை மாலை
  6. பிரிவாற்றாமை
  7. காதலாற்றாமை
  8. கனகசுந்தரம்பிள்ளை மண ஊஞ்சல்
  9. பச்சையப்பன்
  10. ஒரு சரமகவி
  11. WANTED

வெளியிணைப்புக்கள்