Ezhuna book 9

From Ezhuna Media Foundation
Jump to: navigation, search
பண்டைத் தமிழர்
Ezhunabook9.jpg
எழுநா எண் 9
ஆசிரியர் சுவாமி ஞானப்பிரகாசர்
வகை -
பதிப்பு 2013
பக்கங்கள்
ISBN

பண்டைத் தமிழர்

சுவாமி ஞானப்பிரகாசரின் இந்நூல், உலகின் ஆதித்தாய்மொழியாகத் தமிழினை முன்வைத்து, தமிழர் தம் ஆதித்தாயகமான நடுநிலக் கடற்பகுதியிலிருந்து சிந்துவெளி பரவிப் பின் தென்னகம் போந்தார்கள் எனும் கருத்தினை நிறுவும்வகையிலே மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் “செந்தமிழ்” இதழ்களிலே வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். இப்போதைய ஆய்வுச்சூழலில் பொருந்தாத சில கருத்துக்கள் இத்தொகுப்பில் இருந்தபோதுங்கூட தமிழ், தமிழர் குறித்த ஆய்வுவரலாற்றில் இந்நூல் இன்றியமையாததாகிறது.

சுவாமி ஞானப்பிரகாசர்

1875 இலே மானிப்பாயிலே பிறந்த பன்மொழிவித்தகர் சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ்மொழி, தமிழினக்குழுவின் வேர்களை காலத்தினாலே முன்னாய்ந்த அறிஞராவார். மொழியியலில்மட்டுமின்றி, கத்தோலிக்க மதகுருவான அவரின் வரலாற்று, தத்துவ ஆய்வுகளின் பெறுபேறுகள் யாழ்ப்பாணவரலாற்று நூலாகவும் சைவசித்தாந்தம் பற்றிய நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.

ஜெ.அரங்கராஜ்

இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.அரங்கராஜ் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். தனது கலாநிதிப் பட்டத்தினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்ட இவர் தமிழ்ப் பாடநூல்கள் தொடர்பாக முதுதத்துவமாணி ஆய்வினை மேற்கொண்டார். இரண்டு நூல்களை எழுதியுள்ள ஜெ.அரங்கராஜ் ‘சுவாமி விபுலானந்தரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள்’ மற்றும் ‘சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுக் கட்டுரைகள்’ ஆகிய இரு நூல்களின் பதிப்பாசிரியர் ஆவார்

உள்ளடக்கம்

  1. பண்டைத் தமிழர்
    1. ஒரு புதிய கொள்கை
    2. தமிழரின் முன்னைய இருப்பிடக் கொள்கைகள்
    3. மத்தியதரைக் கடலைச் சூழந்த நாடுகளில் தமிழரின் முன்னோர்
    4. ஒத்த ஐதீகங்களும் பழக்கவழக்கங்களும்
    5. பழங்கால எழுத்துமுறை
    6. மேற்காசியாவிலும் ஐரோப்பாவிலும் தமிழ் இடப்பெயர்கள்
    7. குறிப்பான தெய்வ வழிபாடுகள்
    8. பணியர்களும் பண்டு தேசமும்
    9. பரத கண்ட தமிழர் நாகரிகம்
  2. பூனையும் பூசையும்
  3. பனையின் பெயர்கள்
  4. தண்ணீரும் எண்ணெயும்
  5. 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்நாட்டெல்லை
  6. தமிழ்ப்பாசையின் விசித்திரங்கள்
  7. தமிழில் உள்ள நிறச்சொற்கள்
  8. தவறான மனப்பதிவைத்தரும் சரித்திரக் குறிப்புக்கள்
  9. பழையவற்றில் பழைய குறள் வெண்பாக்கள்
  10. பண்டைய மக்களின் பொது இருப்பிடம்
  11. குடஞ்சுட்டு
  12. இலக்கணமும் இலக்கியமும்

வெளியிணைப்புக்கள்